தமிழ் இணைய கல்விக் கழகம் சார்பில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கணினி தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி.

Published Date: November 29, 2025

CATEGORY: CONSTITUENCY

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-25 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது கணினித் தமிழ் சார்ந்து தொடர் சொற்பொழிவுகள் மாதந்தோறும் நடத்தப்படும் என அறிவித்தார்.

இதனைச் செயல்படுத்தும் விதமாக தமிழ் இணையக் கல்விக் கழகம் மாதம்தோறும் துறை சார்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு கணினி தமிழ் தொடர்பான சொற்பொழிவுகளை கல்லூரிகளில் நடத்தி அதனை அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயனடையும் வண்ணம் வளையொலிதளம் (youtube) வழியே நேரலையில் ஒளிபரப்பு செய்து வருகிறது. முதல் கணினித்தமிழ் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 17.12.2024 அன்று எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முனைவர் மதன் கார்க்கி செயற்கை நுண்ணறிவும் கலைகளும் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினர்.

தமிழ் இணையக் கல்விக் தமிழகம், தியாகராஜர் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து நடத்தும் ஏழாவது கணினி தமிழ் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் கணினி தமிழ் பேரவை தொடக்க விழா நேற்று 28.11.2025 மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து தலைமையுரையற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் நீச்சல் காரன் என்கிற இராஜாராமன் (மொழித்தொழில் நுட்ப வல்லுநர்) "தமிழ்ப் பெருமொழி மாதிரிகள் வாய்ப்புகளும் சவால்களும்" என்னும் தலைப்பில் உரையாற்றினார்.  தமிழ் இணையக் கல்வி கழக இயக்குனர் திரு.ரெ.கோமகன் அவர்கள் நிகழ்ச்சியின் நோக்கவுரை வழங்கினார், தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் அசோக்குமார் வரவேற்புரையும், புலத்தலைவர் முனைவர் பாலாஜி நன்றியுரையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தியாகராஜன் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மின்னணுவியல் உள்ளிட்ட பலத்துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Media: Murasoli